Categories
மாநில செய்திகள்

திமுக அரசை குறை சொல்லுறாங்க…. ! பதில் சொல்ல விரும்பல…. வேதனைப்பட்ட ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அன்றைய அதிமுக அரசு செம்பரம்பாக்கம் ஏரியை மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திறந்து விட்ட காரணத்தினால் சென்னையை மிதந்தது. 174 பேர் அப்போ இறந்துபோனார்கள். சுமார் 1,20,000பேர் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஒரு அவலம் அப்பொழுது ஏற்பட்டது.

இப்போது திமுக ஆட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதிமுக ஆட்சி செயல்பட்ட விதத்தையும் நிச்சயம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மழை,  அதிக நீர் வரத்து அதனால் ஏற்பட்ட சேதங்கள் அதை தடுக்க துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம், அப்படி நாங்கள் நிச்சயமாக ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டோம்.

ஒரு நிரந்தர தீர்வை உருவாக்குவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட போகிறோம். தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதை உங்கள் மூலமாக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இந்த பேரிடர் காலத்தில் ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பல்வேறு விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள், நான் அதற்கெல்லாம் பதில் சொல்லி இதை அரசியலாக்க விரும்பவில்லை.

நம்முடைய பணி மக்கள் பணி. நான் ஆட்சிக்கு வந்தபோதே முதன்முறையாக சொன்னது செய்தியாளர்களிடம் திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல, திமுகவிற்கு ஓட்டு போடாத மக்களும் பாராட்ட கூடிய அளவிற்கு நிச்சயமாக என்னுடைய ஆட்சி செயல்படும் என்று உறுதியாகச் சொன்னேன். அந்த அடிப்படையில் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளில் ஈடுபடுவது மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |