கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். அதில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் கொடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அனைவர் மீதும் எங்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுமே 2 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல்துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப் படுத்துவது யார் என்று மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.