Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அராஜகம் அதிகமாயிடுச்சு…! கேட்குறதுக்கு ஆள் இல்லை…. சசிகலா பரபரப்பு குற்றசாட்டு…!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த ஒரு வருட காலத்தில் பார்த்தீர்களென்றால்…. கொலை,  கொள்ளை இதெல்லாம் ரொம்ப அதிகரித்து இருக்கு. அதற்கு காரணம் என்ன அப்படின்னா ? அம்மா இருந்தப்போ….  அவுங்க வந்து போலீஸ் துறையை கவனிச்சிட்டு வந்தாங்க. அவுங்க எந்த கட்சிக்காரர்கள் சொன்னால்கூட அதை எடுத்துக் கொள்வதில்லை.

எங்க கரை போட்ட கட்சி காரங்க யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்….  அதாவது யாருக்காக பரிந்துரையும்,  எதுவும் சொல்ல முடியாது. அது மாதிரி வச்சு இருந்தாங்க. அப்போ ஒரு நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடிஞ்சுது. நான் கட்சிகாரர்களை  குறை சொல்ற அப்படின்னு இல்லை. கட்சி வேற ஆட்சி வேற…

திமுக அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் முழுமையாய் பார்த்தீங்கன்னா…..  அவர்களுடைய அராஜகம் ரொம்ப  அதிகமாயிடுச்சு. அதை கேக்குறதுக்கு ஆள் இல்ல அப்படின்னு பாணியில் அவங்க போயிட்டு இருக்காங்க. இது யாருக்கு பாதிப்பு வரும் என பார்த்தீங்கன்னா…. வாக்களித்த மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். திமுக காரங்க பாதிக்கப்பட மாட்டார்கள், வாக்களித்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |