திமுக எதிர்க்கட்சியை அழிக்க வேண்டும் என காழ்புணர்சியோடு செயல்படுவதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொறுப்பேற்று இருக்கின்ற திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், எதிர்கட்சியை கார்புனர்ச்சியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அது நடக்காது. என்னை பொறுத்தவரையில் அரசியல் கட்சி இயக்கங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்கின்ற போது….
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போன்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அந்த கண்ணியத்தோடு தான், அரசியல் நாகரிகத்தோடு தான் பேச வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை. அந்த அடிப்படையில் தொண்டனில் இருந்து உயர்ந்த பதவி எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியாக இருந்தாலும் கண்ணியத்தோடு அரசியல் நாகரிகத்தோடு பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே ஒரு விரிவான அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் திமுகவினுடைய அத்துமீறிய செயல்களினால் எங்களுடைய வெற்றி கூட அங்கே பறிக்கப்பட்டு திமுக வெற்றியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முறையாக ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.