தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரன் மயிலாடுதுறை வேட்பாளர் கோமல் அன்பரசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டது போல நடந்து கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்று பேசியுள்ளார்.