நெல்லை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரன் என்பவரை தி.மு க பாராளமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தன்னை தாக்கியதாக கூறி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஞான திரவியத்தை கைது செய்ய வேண்டும் என்று பொன்ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சியை சேர்ந்த பாஸ்கரன் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததன் காரணமாக அவரை தி.மு.க பாராளமன்ற உறுப்பினர் மடத்தனமாக தாக்கியுள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும்போது வரும் உள்ளாட்சித் தேர்தலில் எல்லாம் உருட்டுக்கட்டை அராஜகம் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அடிபட்டவர் மீது வழக்கு பதிவு செய்யும் அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.