Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி”: முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நடிகை ரோஜா…. பிரத்யேக பேட்டி….!!!!

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆந்திராவில் நான் மந்திரியாகப் பொறுப்பேற்ற போது ஆந்திர மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ, தமிழக மக்களும் அதே மகிழ்ச்சியுடன் என்னை அன்போடு வரவேற்றனர். திமுக ஆட்சி தமிழகத்தில் நன்றாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவும், திறமையாகவும் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். தற்போது படிக்கின்ற இளைஞர்கள் அனைவரும் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் சென்று நல்ல இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அந்தந்த மாநில தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதாது, தாய் மொழியோடு சேர்ந்து ஆங்கிலம் மற்றும் இந்தி மிகவும் முக்கியம். ஆனால் இந்தியை படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |