Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி 23ஆம் புலிகேசி ஆட்சி”…. டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்…..!!!

தமிழக முதல்வரையும் அமைச்சர்களின் செயல்பாட்டையும் பார்த்தால் “23 ஆம் புலிகேசி” திரைப்பட கதையை போலவே உள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அதிமுக-அமமுக கட்சிகள் இணைப்பு என்ற பேச்சுகள் தொடர்ந்து காற்றுவாக்கில் வந்து கொண்டிருக்கும் செய்திகள் தான். அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியையும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது 23 ஆம் புலிகேசி திரைப்பட கதையை போன்று உள்ளது.

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு தண்டனையை வழங்கியுள்ளது என்று தான் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னென்ன குற்றம்சாட்டினாரோ, அதையெல்லாம் அவர் ஆட்சிக்கு வந்ததும் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக முன்பு கூறிய செயல்பாடுகள் அனைத்தும் தற்போது தலைகீழாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |