திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் இந்தியாவில் தகுதித்தேர்வு தேவையற்றது என்றும் கருத்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் எஸ்.வி சேகர், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் தமிழக முதலமைச்சர் என்று குறிப்பிட்டார். 10 சதவீத இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும் அல்ல என்றும், இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது என்றார்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றுதான் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசிய கருப்பர் கூட்டம் தோடு திமுகவை இணைத்து பலர் சமூக வலைத்தளங்களில்ட்ரெண்ட் செய்து வந்தனர். அதேபோல இன்னும் பத்து மாதத்தில் தேர்தல் இருப்பதால் நடிகர் எஸ்வி சேகரின் இந்த பேச்சு திமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.