திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அதிமுக மீதான ஊழல் பற்றி ஏன் பேசவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுகவை குடும்ப கட்சி, ஊழல் கட்சி என்று ஜேபி நட்டா பேசியுள்ளார். ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்ட அதிமுகவுடன் பாஜக எப்படி நெருக்கமான உறவை வைத்துக் கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருப்பூர் வந்த ஜேபி நட்டா அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வழக்கம்போல் திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பல புகார்களை அடுக்கினார். திமுக குடும்ப கட்சியாக திகழ்கிறது, ஊழல் கட்சியாக உள்ளது. தமிழக கலாசாரத்தை மாற்ற முயற்சி செய்கின்றது. தமிழ் நாட்டின் நலனுக்காக பாடுபட வில்லை. கொரோனா காலங்களில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். பாஜகவினர் தான் உழைத்தனர் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் ஒவ்வொரு புகாருக்கும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுக குடும்ப கட்சி என்ற சொல்லும் பாஜகவில் தலைவர்களின் வாரிசுகள் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். தலைவர்களின் வாரிசுகள் யாருமே அங்கு பொறுப்பு வகிக்க வில்லையா? பாஜகவில் யாரும் குடும்ப வாரிசுகள் அரசியலில் இணைந்து செயல்பட வில்லையா? தலைவர்களின் வாரிசுகளுக்கு பதவி பொறுப்பு கொடுக்கவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. திமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் நட்டா திமுகவில் இதுவரை யாராவது ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட தண்டனைக்கு உள்ளாகி உள்ளார்களா? அதன் தலைமையில் இருந்தவர்கள் இருப்பவர்கள் யாராவது தண்டனை பெற்றுள்ளார்களா?
தமிழகத்தில் பாஜகவுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த கட்சி திமுக. திமுகவுடன் உறவு வைத்திருந்த வாஜ்பாய் முடிவு தவறு என்று சொல்வாரா? திமுகவை ஊழல் கட்சி என்று கூறும் அவர் அதிமுகவை ஏன் சொல்லவில்லை. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா மீது ஊழல் புகார்களை இல்லையா? அவருக்கு தண்டனையும் வழங்க வில்லையா? அவர்தான் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அப்படிப்பட்ட கட்சியுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறதுபாஜக. இந்த நிலையில் திமுகவை குறை கூற வந்துவிட்டது. கொரோனா பரவலின் போது திமுகவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர் என்று அவர் கூறியது தான் திமுகவினர் சிரிக்க வைத்து விட்டது.
அதிமுக ஆட்சியில் திமுக வினர் மேற்கொண்ட பணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களும் அறியும். ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் போன் செய்தால் போதும் வீடு. தேடி வந்து திமுகவினர் உதவிகளை செய்தனர். அதை ஒரு இயக்கம் போல அவர்கள் செய்தனர் இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அப்படியிருக்கையில் திமுகவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர் என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கின்றது. தமிழகத்தின் நிலவரம் குறித்து மத்தியில் ஆளும் பாஜகவினருக்கு சரியான தகவலை கொடுப்பதில்லை என்று திமுகவினர் கேலியாக பேசியுள்ளனர். திருப்பூரில் ஜேபி நட்டா பேசிய எந்த பேச்சிலும் உண்மை இல்லை என்பது திமுகவினர் வாதமாக உள்ளது