தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை மீட்டு எடுக்கவே அமமுக தொடங்கப்பட்டதாக மீண்டும் குறிப்பிட்டார். மேலும் சசிகலா 8ஆம் தேதி வந்தார்கள். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க சொல்லியிருக்காங்க. ஓய்வு முடிஞ்சதும் சசிகலா வெளியில் வருவார்கள். திமுக என்பது தீயசக்தி, திமுக தான் எங்களுடைய அரசியல் எதிரி.
திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தேர்தலிலும் அப்படிதான் நாங்க பணியாற்றுவோம். விலைவாசி உயர்வு, ஆட்சி என்ற பெயரில் நடக்கின்ற அட்டூழியங்கள், எல்லாத்துக்கும் மக்கள் இந்த தேர்தலில் பதில் சொல்லுவாங்க.
கூட்டுறவு கடன் தள்ளுபடி நல்ல நடவடிக்கை, ஆனால் தேர்தலுக்காக செய்து இருக்கின்றார்கள். அமமுக தலைமையில் இருப்பது தான் முதல் அணியாக இருக்கும் வெயிட் பண்ணுங்க. பாராளுமன்ற தேர்தலில் எப்படி செயல்பட்டமோ அந்த மாதிரி செயல்படுவோம். தேர்தலில் எங்களின் வேட்பாளர்கள் யார் ? என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் தயார் செய்கிறார்கள். அஇஅதிமுகவை மீட்டெடுக்கவே அ.ம.மு.க தொடங்கப்பட்டது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.