உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் விருவிருப்பாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுகவினரின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, உண்மையான உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என அச்சமாக இருக்கிறது. திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு, இது தான் திமுக. கடந்த காலத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்தினார்கள் என்று தெரியும்.
பல கட்டுப்பாடுகள் போட்டிருப்பதால் நகைக்கடன் ரத்து ஆகுமா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்று அவர் புகார் கூறினார்..