Categories
அரசியல்

“திமுக என் தாய் வீடு” தேமுதிக-விலிருந்து…. திமுகவுக்கு தாவிய மாவட்ட செயலாளர்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கிருஷ்ணன் கோபால் நேற்று சென்னையில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மீதுள்ள ஈடுபாட்டால் அக்கட்சியில் இணைந்தேன். மேலும் தேமுதிகவை மணப்பாறை தொகுதியில் வளர்த்ததில் எனது பங்கு முக்கியம் ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அக்கட்சியின் போக்கினை என்னால் சரிவர ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மேலும்  கட்சியை வளர்ப்பதற்காக நான் எனது சொந்த பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கட்சிக்குள் சிலர் தேவையின்றி என்னை விமர்சனம் செய்கின்றனர். எனினும் என்னால் கட்சியில் என்னை நம்பியிருப்பவர்கள் எவருக்கும் எதுவும் செய்ய இயலாத நிலையில் தவித்து கொண்டிருந்தேன். இந்நிலையில் விஜயகாந்துக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தற்பொழுது கட்சியை நிர்வகிப்பவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட செயலாளர்கள் இடையே ஆலோசனை நடத்தவில்லை.

தேர்தல் குறித்து யுக்தி அமைப்பதிலும் சறுக்கல்களே தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இதனால் அக்கட்சியிலிருந்து வெளியேறினால் எனது ஆதரவாளர்களின் எதிர்காலம் நன்மை பயக்கும் என்று கருதி அக்கட்சியிலிருந்து வெளியேறினேன். மேலும் திமுகவானது எனது தாய்வீடாகும். நான் எனது சிறுவயதிலேயே திமுக கொடி பிடித்தவன் அதுமட்டுமல்லாமல் திருச்சி சட்ட கல்லூரியில் படிக்கும் பொழுது திமுக மாணவர் அமைப்பு தலைவராக இருந்தேன். இதனால் எனது தாய் வீட்டுக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி ஆகும்” என்று கூறினார்.

Categories

Tech |