திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருடன் கடந்து இதில் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகன் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.