Categories
மாநில செய்திகள்

திமுக எம்.பி ரமேசுக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

கடலூர் திமுக எம்.பி ரமேஷை அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் அடித்த கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த திங்கட்கிழமை அன்று சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. அவர் ஆஜரான பிறகு 13ஆம் தேதி வரை கடலூர் கிளைசிறைச்சாலையில் வைக்க வேண்டும்.. அதன்பிறகு கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது..

அதனடிப்படையில், இன்று காலை சரியாக காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிறகு சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் அவரிடம் விசாரிக்க வேண்டும் என கோரி இருந்தனர்.. ஆனால் நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் குறிப்பாக இன்று பிற்பகல் 1:15 மணியில் இருந்து நாளை பிற்பகல் 1:15 மணி வரை, அதாவது ஒருநாள் அவகாசம் வழங்கியது..

அதிலும் குறிப்பாக அவர் உடல் நலரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது.. அவரது வழக்கறிஞர் சந்திப்பதற்கான அனுமதியை சிபிசிஐடி போலீசார் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது..

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 24 மணிநேரம் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு மீண்டும் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை, மருத்துவ சோதனை செய்யப்பட்டு மீண்டும் மாலை கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது கடலூர் திமுக எம்.பியை அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |