Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திமுக கவுன்சிலர் வீட்டில்…. பட்டப்பகலில் மிளகாய்பொடி தூவி…. மர்ம பெண் துணிகரம்…. பரபரப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கைகுளம் அருகில் 2 தளத்துடன் வீடு மற்றும் வணிகவளாகம் இருக்கிறது. இதற்கிடையில் இவரது மனைவி மேகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் 2வது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து மேகலாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டு அங்கே அமர்ந்துள்ளார். அதன்பின் தண்ணீர் கொடுத்த பிறகு, உடனே மிளகாய் பொடியை மேகலா கண்களில் அப்பெண் தூவியுள்ளார். இதனால் மேகலா தனது கண்களை துடைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரம் தாளிசரடு செயினை அந்த பெண் பறித்து தப்பியுள்ளார். இது தொடர்பாக மேகலா கணவர் ஜெயச்சந்திரன் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,சுகுணா சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தார்.

அதன்பின் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி, எஸ்.ஐ ராஜா போன்றோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் இருக்கும் வணிகவளாகம் மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க கவுன்சிலர் வீட்டில் நுழைந்து மர்மபெண் ஒருவர் மிளகாயப் பொடி தூவி செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |