Categories
அரசியல்

திமுக காங்கிரஸ் கூட்டணி: “3 மேயர் பதவிகளை கேட்கும் காங்கிரஸ்….!!” ஆசை நிறைவேறுமா…?

சென்னையில் உள்ள ஆவடி திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 21 மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மூன்று மேயர் பதவிகளை காங்கிரஸ் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஆவடி, திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மாவட்டங்களின் மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி கேட்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தொகுதிக்கு கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கோயம்புத்தூரில் காலனி வெங்கடேஷும் திருச்சியில் சாருபாலா தொண்டைமானும் மேயர் பதவிகளை அலங்கரித்தனர். அப்போது மொத்தம் உள்ள 6 நகராட்சி தொகுதிகள் தான் இருந்தன. தற்போது 27 தொகுதிகளில் உள்ள நிலையில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கு தருவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது என்பது காங்கிரசாரின் கருத்து.

Categories

Tech |