திமுக ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாஜக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தர்மபுரியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணியிடம் திமுக மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியை பலமாக வைத்துக்கொள்ள எதையாவது பேசும் அண்ணாமலையை கண்டு பரிதாபப்படுகிறேன். பாஜக நான்கு இடங்களில் காலூன்றி வரவில்லை மற்ற கட்சியை தோலூன்றி தான் வந்துள்ளது. இவர் நினைப்பது போன்று திமுக கிள்ளுக்கீரை அல்ல.
இவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இவ்வாறு பேசியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆகவே தான் வட்டியும் முதலுமாக திருப்பித் தருவேன் என்று கூறுகிறார். இவர் வட்டி கடை வைத்திருக்கிறார். அதனால் தான் இப்படி பேசுகிறார். பிரதமர் மோடி எல்லாவற்றையும் அடமானம் வைத்திருக்கிறார். அதனால் வட்டியும் முதலும் கொடுப்போம் என்கின்றனர். அவங்க வரட்டுமே என்னவென்று பார்க்கலாம்.