புதுச்சேரி தேர்தலில் புதிய திருப்பமாக என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி தேர்தலில் புதிய திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு என் ஆர் காங்கிரஸ் வந்தால் கூட்டணி கட்சி தலைவராக ரங்கசாமியை ஏற்கத் தயார் என்று திமுக மாவட்ட செயலாளர் நாஜீம் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நீடிக்கும் நிலையில் திமுக அழைப்பு விடுத்துள்ளது.