Categories
அரசியல்

திமுக கூட்டணியில் பிரச்சினையா…? அப்படி எதுவும் இல்லையே…. எண்ட் கார்டு போட்ட திருமா…!!!

சேலம் மாவட்டம் காடயாம்பட்டி ஒன்றியம், மோரூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து இதனை கண்டிக்கும் விதமாக விசிக தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களை இரண்டு நாட்களுக்கு தள்ளி வைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின்தரப்பு நம் கட்சியினரை தொடர்பு கொண்டு இரண்டு நாள் சுற்றுப் பயணத்திற்கு பின் முதல்வர் சென்னை திரும்புவதற்காக தெரிவித்தனர்.

மேலும் முதல்வர் சென்னைக்கு வந்த பிறகு நம்மிடம் பேச விரும்புவதாகவும், போராட்டத்தை நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். இந்த வேண்டுகோளையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் தெரிவிக்கப்படுகிறது. நம் மீது பொய் வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுக்கும் காவல்துறையினர் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் .முதல்வரிடம் பேசிய பிறகு இது குறித்த முடிவை எடுக்கலாம்.

இந்த ஆர்ப்பாட்டம் திமுக கூட்டணி உறவில் இருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. காவல்துறையில் கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள். திமுகவில் விசிக கூட்டணி வகித்து வரும் நிலையில் காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கூட்டணியில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா? என்று விவாதம் எழுந்து வந்த நிலையில் கூட்டணியில் எந்த பிரச்சினையும் கிடையாது என்று விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திருமாவளவன்.

Categories

Tech |