தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். அதில் திமுக சார்பாக போட்டியிட 174 வேட்பாளர்களும், கூட்டணி கட்சி சார்பாக 13 வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மொத்தம் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக – 174, காங்கிரஸ்- 25, விசிக -, மதிமுக – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மா.கம்யூனிஸ்ட்- 6, ஐ.யூ.எம்.எல்-3, மமக-2, முருகவேல்ராஜின் ம.வி.க -1, அதியமானின் ஆ.த.பே -1, ஈஸ்வரனின் கொ.ம.தே.க -3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவையென்று நாளை 12 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.