பாஜகவின் விபி துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை. விபி துரைசாமி எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். விபி துரைசாமி போன்று கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் அல்ல. சட்ட மன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மாநிலங்களவை தேர்தலில் ஆதரவளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.தமிழகத்தை பொருத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.