கடலூர் மாவட்டத்தில் பணிக்குப்பத்தில் திமுக அரசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில், தொழிலாளி கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதில் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட அவரது பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து கோவிந்தராஜன் குடும்பத்தினர் எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் நடராஜன், அல்லாபிச்சை, வினோத் ஆகியோர் இவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது, “திமுக கட்சியானது கொள்ளையடிக்கும் கட்சியாகும். மேலும் கடலூரில் எம்பி தலைமறைவாகியுள்ளார், இதைபோல் திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் FIR இவை இரண்டும் திமுக ஆட்சியில் மக்களுக்கு அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. இந்த திமுக ஆட்சியானது நான்கரை மாதங்களில் மக்களை அடிமைகளாக மட்டுமே மாற்றி வருகிறது” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.