Categories
அரசியல் திருச்சி

திமுக சார்பில் சமத்துவ பொங்கல்!…. பரிசுகளை அள்ளி கொடுத்த அமைச்சர்….!!!!

திமுக சார்பில் நேற்று திருச்சி கருமண்டபத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். இந்த பொங்கல் விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், காமராஜ், வட்ட செயலாளர் பி.ஆர்.பி பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கருமண்டபம் அருகே உள்ள மாந்தோப்பு திடலில் அப்பகுதி பெண்கள் சமத்துவ பொங்கலை வைத்தனர். அதன் பிறகு டீ ஸ்பூன், பானை உடைத்தல், சாக்கு போட்டி, சோடா நிரப்புதல், இசை நாற்காலி, ஓட்ட பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வாரி வழங்கினார்.

Categories

Tech |