Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக சொன்னதை தான் செய்யும்” உதாரணத்திற்கு இது போதாதா…? ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர் அனிதா…!!!

ஜெயகுமார் மீன்பிடி நிவாரணமாக திமுக ரூ.8000 அறிவித்துவிட்டு ரூ.5000 கொடுப்பதாக கூறி இது தான் சொன்னதை செய்வதா? எனறு விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவரின் கருத்துக்கு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் படும் கஷ்டங்களைப் போக்குவதற்காக நிவாரண தொகையாக ரூபாய் 5000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள படி மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8000 த்தை வரவிருக்கும் காலங்களில் முதல்வர் அவர்கள் வழங்குவார்கள். பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், இக்கட்டான சூழ்நிலையில் மக்களை காக்கும் அரணாக திகழ்கிறார் முதல்வர். தேர்தலில் தோல்வியுற்ற மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் தன்னை சுய விளம்பரம் செய்வதற்காக வாய்க்கு வந்தவாறு பிதற்றுகிறார். கடந்த காலங்களில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தது உண்டா?

சென்னையில் அமர்ந்துகொண்டு பேட்டிகளை கொடுத்து தன்னை தானே விளம்பரம் செய்து கொண்டிருந்த ஜெயக்குமார் அவர்கள் தற்போதும் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். மீன்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் என்றாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கு சென்றதுண்டா?  தலைவர் சொன்னதை தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக ராயபுரம் தொகுதியில் தலைவர் சொன்னதை போல் கழகத் தொண்டர் ஒருவரை நிறுத்தி ஜெயக்குமாரை தோல்வியடைய வைத்தார்கள்.

திமுக சொன்னதையும் செய்யும் இயக்கம் என்று உணர்ந்து கொள்வதற்கு இது போதாதா? துறை சார்ந்த பணிகள் முற்றிலும் மறந்து விட்டு தான்தோன்றித்தனமாக பேட்டியளித்துக்கொண்டிருந்த ஜெயக்குமார் அவர்கள் சொந்த தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுபோன்ற வீண் விளம்பர யுக்திகளை கைவிட்டு விட்டு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் அவர் செய்த தவறுகள் குறித்து மக்கள் மன்றத்தில் நாங்கள் விளம்பரப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |