Categories
அரசியல்

திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்…. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!!!!!

திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல கொள்கைக்கான கூட்டணி என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அதில்  அவர் பேசிய போது, மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் மாநில அரசுகள் வலுவாக இருப்பது மத்திய அரசிற்கு பலம் தானே தவிர பலவீனம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே நாட்டை காப்பதாக அர்த்தம் என கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சு உரிமை மறுக்கப்படுவதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை என வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாகவே நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது எனக் கூறி  சிறிது நேரம் மலையாளத்தில் உரையாற்றியுள்ளார். இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்கின்ற நாடு. இங்கு ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அரசியல் மொழியாகவும் நிச்சயமாக ஆக முடியாது அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என கூறியுள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அப்போது ஸ்டாலின் அவரிடம் நெருக்கம் காட்டியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையின் போது அவருக்கு யாரும் எதிர்ப்பு காட்டி விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசு கவனமாக  இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவ்வப்போது ஆட்சி எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதால் திமுக கட்சி உடைகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் கூட்டணி பற்றி முதல் ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

Categories

Tech |