Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக தான் ஜெயிக்குமா….? கலங்கி நிற்கும் அதிமுக…. கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!

IANSC- voter நடத்திய கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டின் மே மாதத்தில்  தமிழ்நாடு,மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் பதவியில் நீடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக IANSC- voter வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 154 இடங்களில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் முந்தைய தேர்தலை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 53 தொகுதிகள் குறைவான எண்ணிக்கையை பெறும் என்று கூறப்பட்டுள்ளது . இதே போல் பாஜக கட்சி கடந்த தேர்தலை விட  99 தொகுதிகள் அதிகமான எண்ணிக்கையை  பெறும் என்றும்  கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 162 தொகுதிகளை அபாரமாக கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், ஆட்சியில் உள்ள அதிமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 72 தொகுதிகளில் கடும் தோல்வியை  சந்திக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

அசாமில் பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது  முதலமைச்சர் பதவியில் இருக்கும் சர்பானந்தா சோனாவால் மீண்டும் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த  சட்டமன்ற தேர்தலை விட  14 தொகுதிகள் அதிகமாக பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது முதலமைச்சராக பதவியிலிருக்கும் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 46.7% மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இடது ஜனநாயக முன்னணி 85 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்ட பேரவை தேர்தலில்  அதிமுக வெற்றி பெறும்  என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |