தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் மக்களை கவரும் வண்ணம் மகளிர் சுயஉதவிகடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்ட முக.ஸ்டாலின், “திமுகவின் தேர்தல் அறிக்கையின் பல அம்சங்கள், அதிமுகவால் காப்பி அடிக்கப்பட்டு தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.