நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், இன்றைக்கு எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் வாகனங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 23க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரம் வாகனங்களை இன்று தொடங்கி இருக்கிறோம். எங்களுடைய மத்திய அரசாங்கத்தினுடைய திட்டங்களையும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு என்னென்ன நல்ல திட்டங்களை செய்திருக்கிறது ?விவசாயிகளுடைய சன்மானம் நிதி கொடுத்த திட்டம், அனைவருக்கும் வீடு கொடுத்த திட்டம்,
அதே மாதிரி உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு திட்டம், இப்படி மக்களை சென்று சேரும் விதமாக எங்களுடைய பிரச்சாரம் வாகனங்களை இன்றைக்கு தொடங்க இருக்கிறோம். இந்த பிரச்சாரம் வாகனங்கள் நாங்கள் எங்கெங்கு போட்டியிடுகின்றோமோ அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை தொடங்கி வைக்க இருக்கிறோம்.
நாங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய திட்டங்களையும், மாநில அரசாங்கத்தினுடைய திட்டங்களையும் மக்களிடத்தில கொண்டு சேர்த்து எங்களுடைய தேர்தல் பிரசாரத்தை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் கொண்ட தேர்தல் அறிக்கையாக இருக்கிறது தேர்தல் அறிக்கையில் சொல்றது ஒன்றாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையை மறந்துட்டு, கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.