தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களின் மனங்களை கவர்வதற்காக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் மக்களின் நலனே முக்கியமாக இருக்கும். மக்களின் விடியலுக்கான திட்டங்களை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இந்த தேர்தல் அறிக்கை 2006-ம் ஆண்டு முத்தமிழ் கலைஞர் கூறியதை போலவே தற்போதைய 2021ஆம் சட்டமன்ற தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது என்று அவர் கூறினார்.