Categories
மாநில செய்திகள்

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கு!…. மேலும் 2 பேர் கைது……!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது வடசென்னை கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் பரமேஸ்வரன், டில்லிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |