சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வரும் சேப்பாக்கம் திமுக செயலாளர் மதன் மோகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவது உறுதியான மறுநிமிடமே தீவிர பணிகளை முடுக்கிவிட தொடங்கினார். இவருக்கு முனுசாமி என்பவர் பக்கபலமாக இருந்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக முனுசாமி ஆற்றிய பணி உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே திமுக பகுதி செயலாளர் மதன் மோகனை உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தளவு பிடிக்குமோ அதே அளவு கட்சிக்காக உழைத்த முனுசாமியையும் அதிகமாக பிடிக்குமாம். ஏற்கனவே கே.முனுசாமி சில காலங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென காலமானார். இதுகுறித்து தகவலறிந்த உதயநிதி ஸ்டாலின் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் திமுக தொண்டர்களுடன் சென்று முனுசாமியின் உடலுக்கு கவலையுடன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு முனுசாமியின் குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கவலையில் உடைந்து நின்றதை பார்த்த தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.