Categories
அரசியல் சற்றுமுன்

திமுக நோக்கி ரஜினி மன்றத்தினர்…!! இணைந்த முக்கிய மாவட்ட செயலாளர் …!!

ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுகவில் இணைகிறார்.

நடிகர் ரஜினி சார்பில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது ரஜினி கட்சி தொடங்காத காரணத்தால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது பார்த்தோமென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயலாளராக இருந்த ஸ்டாலின் திமுகவில் இணைய இருக்கின்றார். வட சென்னையில் உள்ள எர்ணாவூரின் இருந்த இவரின் வீட்டு முகவரியில் தான் மக்கள் சேவை கட்சி என்ற ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டது.

அந்த கட்சியினுடைய சின்னம் ஆட்டோ சின்னம் என்று வெளியாகியது.இது தான் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி ன்றெல்லாம் சொல்லப் பட்ட நிலையில் ரஜினி அரசியலில் இறங்க வில்லை என அறிவிப்பு வெளியிட்டார். அதையடுத்து தற்போது திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் இவர் இணைய இருக்கிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அவருடன் அவருடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் இணைந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதியழகன் என்ற மக்கள் மன்ற நிர்வாகி இணைப்பு விழாவை நடத்தி 50 ஆயிரம் பேருடன் கிருஷ்ணகிரியில் சேர்ந்தார். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஒரு கட்சியில் இணைய கூடிய நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது தற்போது ரஜினியின் முக்கியமான விசுவாசியாக இருந்த ஸ்டாலின் அறிவாலயத்தில் திமுகவில் இணைய வந்திருக்கிறார்.

Categories

Tech |