தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் பேசுவது அனைத்துமே பாஜகவை எதிர்த்து தான். அவர்கள் பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்து தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் இருந்து அவருடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள்.
இந்தியா சார்ந்த எந்த கருத்துக்கள் வந்தாலும் கூட பேச வேண்டியது நாங்கள் தான். எங்களுடைய ஆணித்தரமான உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதைத்தான் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கருத்தியல் ரீதியான அரசியல் என்றால் திமுக பாஜக இடையே தான் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியுள்ளார்.