Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – பாஜக கூட்டணி?… வேற லெவல்… திடீர் திருப்பம்…பரபரப்பு…!!!

மன்னார்குடியில் திமுக வேட்பாளர் விளம்பரத்தில் தாமரை வடிவ டிசைன் கொடுக்கப்பட்டதால் திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளை விட அவர்களை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து விடுகின்றனர். மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜாவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த சுவரில் ஜன்னலுக்கு தாமரை வடிவ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய நெட்டிசன்கள் கண்ணில் பட அதிமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி என கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |