செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னைவிட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் யார் இருக்கா ? யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கறுப்பு நான். யுவன்சங்கர்ராஜா அவர்களை விட கறுப்பு தமிழன் நான். யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கருப்பு திராவிடன் நான். அதனை யுவன் சங்கர் ராஜா சகோதரருக்கே சொல்லுகின்றோம்…
நானும் கருப்புதான். கருப்பு திராவிடன் தான். தயவுசெய்து யாரோ ஒருத்தரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்லாதீங்க. உடனே பாரதிய ஜனதா கட்சியில் எல்லாரும் வெள்ளை பாருங்க. அவுங்க வெள்ளை என்பதால் இந்த கட்சி, வெள்ளை என்பதால் இந்த சமுதாயம்… வெள்ளை என்பதால் நார்த் இந்தியா… எத்தனை நாளுக்குத்தான் இதை ஓட்டுவோம். இந்தி தெரியாது, எனக்கு சத்தியமா தெரியாது…
தமிழ்நாட்டை விட்டு நான் வெளியே போனது படிப்பதற்கு, வேலை செய்வதற்கு வந்தாச்சு… எனக்கு சத்தியமா ஹிந்தி தெரியாது. எங்களிடம் எதுவுமே இல்லை. எல்லோரும் இங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கின்றோம். நாங்க கருப்பு திராவிடனா ? நீங்கள் கருப்பு திராவிடனா ? நாங்க கருப்பு தமிழனா ? நீங்க கறுப்பு தமிழனா ? நாங்க உள்ளூர் தமிழனா ? இல்ல நீங்க உள்ளூர் தமிழனா ? எத்தனை நாளைக்கு இந்த திமுக பிஞ்சு போன பஜ்ஜியை வச்சு 70 ஆண்டுகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.