திமுகவின் பிரசார கூட்டத்தில் திமுக தொண்டர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கம் எழுப்பிய சம்பவம் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசாரத்தை நடத்தினார். அந்த பிரசாரத்தில் எம்பி கனிமொழிக்கு, திமுக தொண்டர்கள் வீரவாள் வழங்கினர்.
அப்போது தொண்டர்கள் அனைவரும் ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கம் எழுப்பிய சம்பவம் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தம்பாடி பகுதியில் இந்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரையை கடுமையாக விமர்சிக்கும் திமுகவின் பிரசார கூட்டத்தில் எழுந்துள்ள இந்த முழக்கம் பேசுபொருளாக மாறியுள்ளது.