திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே நகரில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரன் அலுவலகத்தில் அமுதா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் கணவர் பொன்வேல் என்பவர் அலுவலகத்திற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தனசேகரன் பொன்வேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொன்வேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனசேகரனை தாக்கியுள்ளார். இதில் தனசேகரனுக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்த வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.