தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட கே.வி.கோட்டை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.