Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக மாதிரி பெருசா தமிழகத்தில் வேற எந்த கட்சியும் செய்யல – சசிகலா

தமிழகத்தில் திமுக மாதிரி வேற எந்த கட்சியும் தேர்தல் அறிக்கை புக் வடிவில் கொடுக்கவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்கு பிறகு இதைப் பற்றி சொல்லனும் என நினைத்தேன். இப்ப ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அவங்க சொன்ன 500க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 400 செஞ்சு முடிச்சிட்டோம்…  435 செஞ்சு முடிச்சிட்டோம் அப்படி எல்லாம் சொல்றாங்க.

ஆனா  மக்கள் கிட்ட கேட்கும் போது அந்த மாதிரி எதுவும் இல்லைன்னு சொல்றாங்க. அவங்க வந்து கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான வாக்குறுதிகள்…. ஒரு பெரிய புத்தகமாக போட்டு தேர்தல் அறிக்கையை முதன்முதலில் கொடுத்து இருக்காங்க அவங்க தான்.

வேற எந்த கட்சியிலும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய புக் கொடுக்கல. ஆனா அதுல கவனம் செலுத்துங்க.  ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், அமைச்சர்களை தொடர்ந்து, அரசு அதிகாரிகளும் தங்களின் சமூக வலைத்தளங்களில் நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி என பதிவிடுகின்றார்கள். அம்மாவையே விட ஒன்னும் பெருசா செய்யவில்லை என்ற கேள்விக்கு….  அது மக்களுக்கு தெரியும்ல. நம்ம வேணாம்னா  புகுத்தி பார்க்கலாம். ஆனா உண்மை வந்து மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழக மக்களுக்கு யாரு என்ன செஞ்சாங்கன்னு ? என பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், அரசு அதிகாரிகள் என்ன செய்வார்கள் ? பதவியில் இருப்பவர்கள் மந்திரியாக இருப்பவர்கள்… அவர்கள் சொல்வதை தான் கேட்டு செயல்படுவாங்க. ஆனா இருந்தாலும் எல்லா அதிகாரிகளையும் நாம் அப்படி நினைக்க முடியாது. எல்லாரும் மனவருத்தத்தில் தான் இருக்காங்க. என எல்லோரும் சொல்வது என்ன என்றால்…..

அம்மா இருந்தப்ப பிரியா எதுவா இருந்தாலும் மீட்டிங்ல வந்து எல்லா செயலாளர்களிடமும்  கலந்துரையாடவும் நடக்கும். அதுல யார் சொல்வது நல்லது என்பதை  எடுத்துக்குவாங்க அம்மா ஆனா இப்போ அதிகாரிகளுக்கே எதுமே தெரியுறது இல்ல என குறிப்பிட்டு பேசினார்.

Categories

Tech |