Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக மாறியதாக தெரியவில்லை…. தவறான பாதையில் செல்கிறது….. அண்ணாமலை…!!!!

திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின

தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால் மக்களுக்கோ மத்திய அரசு மேல் நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் கிராம மக்களை சென்று அடைந்துள்ளது என்று கூறினார்.

Categories

Tech |