Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வரலாற்றில் அது நடந்தது இல்லை”…. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்…!!!

திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவிட்டால், அவ்வளவு தான். மக்கள் வெறுத்து போயுள்ளனர். திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அப்படி வந்ததாக சரித்திரமும் இல்லை.  விடியலை தருவோம் என வாக்கு வாங்கிவிட்டு, விடியாத அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஒன்றுபட்ட இயக்கம், அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதை பற்றி பொருட்படுத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை, தேர்தல் வரும் போகும். ஆனால் நாங்கள் மக்கள் நலனுக்காகதான் போராடிவருகிறோம் என்றார்.

Categories

Tech |