Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக….! வரும் போகும் தெரியாது…. அதிமுக…! பேச்சிக்கே இடமில்லை … சுட்டிக்காட்டிய முதல்வர்

திமுக ஆட்சியில் கரண்ட் எப்போது வரும், போகுமென தெரியாது, அதிமுக ஆட்சியில் அந்த பேச்சிக்கே இடமில்லை என முதல்வர் தெரிவித்தார்.

நேற்று சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், துறைவாரியாக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இன்று தேசிய அளவில் விருதை குவித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறையை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை நாம் பெற்றுள்ளோம். நீர் வேளாண்மை ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டு ஏரி – குளம் போன்றவை தூர்வாரப்பட்டு, பருவ காலத்தில் பெய்த மழை தேங்கி காட்சியளிக்கின்றது. அதே நேரம் நதி மற்றும் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று மூன்று ஆண்டு கால திட்டத்தின் அடிப்படையில் அந்த திட்டத்தையும் இன்று நிறைவேற்ற்றியுள்ளோம்.

அதோடு நிலத்தடி நீரை உயர்த்தி நாட்டு மக்களின் தேவையையும் தேவையான நீரையும் கொடுத்துள்ளோம். நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி சென்றோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தபோது 406 கோடி செலவில் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு முன் எந்த அரசு அதை செய்தது? திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்ததால் கிராமத்தை திரும்பிப் பார்த்தார்களா! நீர் மேலாண்மைக்கு என்ன சட்டத்தை வகுத்தார்கள்.

இன்று தகுந்த சட்ட நடவடிக்கையின் காரணமாக நீர் மேலாண்மை சரியாக செயல்படுத்தி அதன் விளைவு தேசிய அளவில் 2019 தில் விருது பெற்றுள்ளோம். மின்சாரத்துறை சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.  இந்தியாவிலேயே உபரி மின்சாரம் செய்யும் மாநிலத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் எப்போது கரண்ட் வரும் போகும் என்பது தெரியாது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசில் இன்று மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் நாம் உபரி மின்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் பல தொழில்களை தமிழகத்தில் கொண்டு வருகின்றோம்.

2019ல்  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினேன் .அந்த மாநாட்டில் 304 குறிஞ்சி ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழிற்சாலைகள் வருவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் அதில் முதலீடு செய்வதாக தெரிவித்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் கொரோனா  வைரஸ் தொற்று இருக்கும் காலகட்டத்தில் கூட இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழில் துவங்க தொழில் அதிபர்கள் முன்வந்து 60,000 கோடிக்கு தொழில் தொடங்கினார்கள்.

இன்று புதிய புதிய தொழில்கள் தொடங்கும்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவது நாம் முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கின்றோம். வேளாண்மையில் சிறந்து விளங்கி கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டின் வரலாற்றுச் சாதனையை நமது அரசு படைத்து  இருக்கின்றது. டெல்டா மாவட்டங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 32 லட்சத்து 40 ஆயிரம் லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து சரித்திர சாதனை படைத்தோம். இதற்கு முன் தமிழக வரலாற்றில் நமது அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 23 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதலுக்கு மேல் செய்யவில்லை .23 எங்கே இருக்கிறது 34 எங்கே இருக்கிறது.

நீர் மேலாண்மை சட்டத்தை அம்மாவின் அரசு முறையாக செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உதவிய பின்விளைவாக தமிழகத்தில் அதிக நெல் உற்பத்தி படைத்து சாதனை படைத்த அரசாக அம்மாவின் அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கும் நமக்கு தேசிய விருது கிடைத்தது. கல்வியில் முன்னிலை மாநிலமாக விளங்கி கொண்டிருக்கின்றோம்.

Categories

Tech |