தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து நேற்று வாக்குஎண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 74 வாக்கு எண்ணும் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கட்சி அடிப்படையிலான மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து நாஞ்சில் சம்பத் டுவீட் போட்டுள்ளார்.
இந்த டுவீட் ஆனது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில். “திமுக வானை நோக்கி உயர்கிறது; அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது. பாஜகவிற்கு பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.!” என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விட பாஜகவை பயங்கரமாக பேசி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் வார்டு உறுப்பினராக நின்ற பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.