Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது… ஸ்டாலின் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் திமுக வெற்றியை எதிர்ப்பது அதிமுக மட்டுமல்ல பாஜகவும் தான் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் இன்னும் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக வின் வெற்றியை தடுப்பதற்கு சூழ்ச்சி நடக்கிறது. திமுக வெற்றியை எதிர்ப்பது அதிமுக மட்டுமல்ல பாஜகவும் தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |