தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சியினர் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தி.மலை வேட்பாளர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ஐடி ரெய்டில் ரூபாய் 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எ.வ வேலுவின் வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.