Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த மினி வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து ஆட்டுத்தோல் பாரம் ஏற்றி கொண்டு மினிவேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். மேலும் சாலை ஓரமாக வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |