திம்பம் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகில் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவு ஒன்று இருக்கிறது. இந்த வளைவு பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹரி குமார் (53) என்பவர் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 5-வது கொண்டை ஊசி வளைவு பாதையில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஹரிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். உடனே விரைந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் காயமடைந்த டிரைவர் ஹரி குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.