ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 8 பேர் உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.