Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதை: சாலையோர தடுப்பு சுவரில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை… வெளியான புகைப்படம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதையானது இருக்கிறது. இம்மலைப்பாதையில் இரவுவேளையில் அவ்வப் போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப் பாதையின் 19வது கொண்டைஊசி வளைவு அருகேயுள்ள சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்துசென்றது.

இந்நிலையில் அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் சிறுத்தை நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். எனினும் அந்த சிறுத்தை எதையும் கண்டுகொள்ளாமல் தடுப்பு சுவரில் நடந்தபடி இருந்தது. உடனடியாக வாகனத்தில் சென்றவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிதுநேரம் வரை தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை, பின் அடர்ந்த வனப் பகுதிக்குள் பாய்ந்து சென்று மறைந்தது.

Categories

Tech |